முக்கிய விழாக்கள்


இவ்வாலயத்தில் சிறப்பாக ஆவணி மாதச் சதுர்த்தி அதி விமர்சையாக கொண்டாடப்படுகிறது.அன்று காலை 8 மணி முதல் வரசித்தி விநாயகருக்கு விசேஷமாக 108 சங்க அபிஷேகத்துடன் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அருகம்புல் மாலை சாற்றி வழிபடுகிறார்கள்..அன்று மாலை 6.30 மணிக்குவிசேடமாக பஞ்சமுக விநாயகருக்கு உடையமந்திரம் 1008 நாமங்களால் அர்ச்சனை இரவு8மணி வரையும். விசேடமாக பூஜைகள் நடைபெற்று, விநாயகப்பெருமான் சர்வ அலங்காரத்துடன், நாதஸ்வர மேள இசைகளுடனும் பக்தர்களின் பஜனை பாடல்களுடனும் வீதிவலம் வரும் காட்சி, கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.அதுமட்டுமின்றி ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்புத்தாண்டு, பொங்கல். தைப்பூசம் சித்ராபவுர்ணமி ஆடி அமாவாசை. நவராத்திரி பூஜை விழா. முருகனுக்கு சஷ்டி,தைப்பூச பூஜை. சகல இந்துசமய விசேஷ தினங்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. இது தவிர மாதந்தோறும் வரும் சதுர்த்தி தினத்தன்று மாலை விசேஷ அபிஷேகத்துடன் பஞ்சமுக விநாயகருக்கு பூஜைகள் நடைபெற்று,பக்தர்களின்தேவார பாராயணத்துடன் உள்வீதி உலா வருவார்.