வருடாந்த மஹோற்சவம்


ஒவ்வொரு வருடமும் தமிழுக்கு வரும் ஆனி மாதத்தில் வரும் முதல்ஞாயிறுக்கிழமை
தேர் திருவிழா வரக்கூடியதாக மஹோற்சவம் கொடியேற்றத்தடன் ஆரம்பமாகி பத்துத்
தினங்கள் மிகவும் விமரிசையாக திருவிழா நடைபெறுகிறது. 9ம் நாள் தேர், 10ம் நாள்
காலையில் தீர்த்தவாரி உற்சவமும்.இத்தலத்தில் கொண்டாடப்படும். எந்த காரியங்கள்
தொடங்கினாலும் இவரை வணங்கி விட்டு தொடங்கினால் காரியங்களில் வெற்றி உறுதி.

பூஜைகள் தின பூஜைகள் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4மணி
முதல் இரவு 8மணி வரையும். செவ்வாய் கிழமைகளில் மாலை 5.30 மணி முதல்
7.00 மணிவரையும், மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 5.00 மணி முதல்
இரவு 8.30 மணி வரை பூஜைகள் நடைபெறுகின்றன. அதி விசேட தினங்களில்
காலை 8 மணிமுதல் 13.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி
வரை திறந்திருக்கும்.விசேட தினங்களில் நேரமாற்றம் செய்யப்படும்.